Sunday 5th of May 2024 11:52:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 2 GS பிரிவுகள் காலை முதல் முடக்கப்பட்டன!

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 2 GS பிரிவுகள் காலை முதல் முடக்கப்பட்டன!


இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை முதல் திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (மே-06) காலை முதல் உடன் அமுலாகம் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை அதிகார பிரிவின் பனங்கம்மன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில், சுபத்ராலங்கா மாவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் அதிக தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE